நியூசிலாந்தில் இன்று 10,424 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆக்லாந்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் துணை மாறுபாடு BA.2.75 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து சமூகத்தில் முதல் முறையாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1870 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 20 பேர் உட்பட 788 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 348 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.