இன்வெர்கார்கிலின் (Invercargill) வடக்கே, டாக்ரே (Dacre) என்ற இடத்தில், மாநில நெடுஞ்சாலை 1ல் காவல்துறையினரால் சுடப்பட்ட ஒரு நபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நண்பகலுக்கு சற்று முன்பு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பொலிஸாரை ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது அவர் சுடப்பட்டார்.

இதனை அடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேர் சாலை (Kerr Road) மற்றும் SH 98 க்கு இடையே மாநில நெடுஞ்சாலை 1 மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.