பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று காலை உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் நியூசிலாந்தின் வலுவான ஆதரவையும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அதன் மொத்த கண்டனத்தையும் வழங்குவதற்காக, பிரதமர் ஆர்டெர்ன் உக்ரைனின் பிரதமருடன் பேசியுள்ளார்.

இந்நிலையில் "ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக விரைவான நடைமுறை நடவடிக்கையை எடுத்த முதல் நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்திற்கு பிரதமர் ஷ்மிஹால் நன்றி தெரிவித்ததாக பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அண்டை நாடு மீதான தாக்குதல் நடத்துவது "ஆத்திரமூட்டும், நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமானது" என்று நியூசிலாந்து கருதுவதாக ஷ்மிஹாலிடம் பிரதமர் ஆர்டெர்ன் தெரிவித்தார்.

"உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், அப்பாவி உயிர்களின் பேரழிவைத் தவிர்ப்பதற்காக நிரந்தரமாக வெளியேறுமாறும் நியூசிலாந்து ரஷ்யாவிடம் தொடர்ந்து வலியுறுத்தும் விடுக்கும்" என்று பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் குறித்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் 364 அரசியல் மற்றும் இராணுவ நபர்கள் பயணத் தடை பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் புடின் மற்றும் அவரது பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கப்பல்கள் மற்றும் விமானங்களை தடை செய்தல் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளுக்கு உட்பட்டுள்ளனர் என பிரதமர் ஆடர்ன் ஷ்மிஹாலிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் "ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கான அவர்களின் முடிவின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் ஆர்டெர்ன் இதன்போது தெரிவித்துள்ளார்.