இன்று நியூசிலாந்தில் 14,128 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 05 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 3498 பேரும், நோர்த்லேண்டில் 536 பேரும், வைகாடோவில் 1333 பேரும், Bay of Plenty இல் 956 பேரும், Lakes இல் 416 பேரும், Hawke's Bay இல் 841 பேரும், Mid Central இல் 599 பேரும்,  Whanganui இல் 205 பேரும், தரணகியில் 470 பேரும், Tairawhiti இல் 232 பேரும், Wairarapa வில் 164 பேரும், Capital and Coast இல் 906 பேரும், Hutt Valley வில் 549 பேரும், Nelson Marlborough வில் 416 பேரும், Canterbury இல் 1937 பேரும், South Canterbury இல் 135 பேரும், தெற்கில் 890, West coast இல் 39 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 25 பேர் உட்பட 943 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் 18 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 451,537 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 290 முதல் டோஸ்கள், 513 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 5336 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 370 முதல் டோஸ் மற்றும் 4272 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.