பல போதைப்பொருள் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான் தேடுதல் வாரண்ட்களை நிறைவேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொத்து மீட்புப் பிரிவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்று ஹேஸ்டிங்ஸ் பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு சென்றதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இந்நிலையில் பொலிஸார் கைப்பற்றிய வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 வயதுடைய நபருடையது என்று துப்பறியும் சார்ஜென்ட் அலெக்ஸ் மெக்டொனால்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹாக்ஸ் பே பகுதியில் சப்ளை செய்யப்படும் மெத்தாம்பேட்டமைன், எக்ஸ்டசி மற்றும் கஞ்சா போன்றவற்றை அந்த நபர் வைத்திருந்ததாக மெக்டொனால்ட் கூறினார்.

குறித்த போதைப்பொருள் சுமார் 90,000 டொலர்கள் மதிப்புடையது, அதே நேரத்தில் காவல்துறை தற்போது கைப்பற்றிய சொத்துக்களின் மதிப்பு 1 மில்லியன் டொலர்களுக்குள் அதிகமாகும்.

"இன்றைய நடவடிக்கையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உட்பட ஒரு வீடு, பணம் மற்றும் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன."

இதனிடையே மாவட்டத்தில் உள்ள கும்பல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராட காவல்துறையும் சொத்து மீட்புப் பிரிவும் கடுமையாக உழைத்து வருவதாக மெக்டொனால்ட் கூறினார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் மோங்க்ரல் கும்பலின் ஹாக்ஸ் பே உறுப்பினர்களிடமிருந்து மட்டும் 6.5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

மேலும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் குற்றத்திலிருந்து சம்பாதித்த சொத்துக்களை அகற்ற நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.