டவுரங்காவில் 700 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை கப்பல் கொள்கலனில் இருந்து சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜனவரி 2022 இல் தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு டவுரங்காவை வந்தடைந்த ஒரு கப்பலில் இருந்த கொள்கலனில் இருந்தே இவ்வாறு கொக்கைன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இதன் பெறுமதி 280 மில்லியன் நியூசிலாந்து டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வருவதாக சுங்க விசாரணை மேலாளர் கேம் மூர் தெரிவித்தார்.

"இந்த மிக முக்கியமான கைப்பற்றல், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் எப்படி நியூசிலாந்தைச் சுயநலமாக பயன்படுத்த தீவிரமாக முயற்சி செய்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால், தொழில்துறை அளவில் நியூசிலாந்திற்கு போதைப்பொருள் கடத்த முயல்கின்றனர்.

மேலும் ஏனைய போதைப்பொருள் சந்தைகளை அணுக நியூசிலாந்தை பயன்படுத்த விரும்புகின்றனர்" என்று மூர் கூறினார்.

அதை நடக்க அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

போதைப்பொருள் கடத்தலை சீர்குலைப்பதற்கும் நியூசிலாந்தின் எல்லைகளை பாதுகாப்பதற்கும் சுங்கமும் அதன் கூட்டாளர்களும் மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சிகளை இந்த கைப்பற்றல் காட்டுகிறது." என‌ அவர் மேலும் தெரிவித்தார்.