இன்று நியூசிலாந்தில் 21,616 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 02 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த மரணங்கள் தெற்கு மற்றும் Capital and Coast இல் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 6,085 பேரும், நோர்த்லேண்டில் 708 பேரும், வைகாடோவில் 2,062 பேரும், Bay of Plenty இல் 1,424 பேரும், Lakes இல் 633 பேரும், Hawke's Bay இல் 1,111 பேரும், Mid Central இல் 888 பேரும்,  Whanganui இல் 276 பேரும், தரணகியில் 510 பேரும், Tairawhiti இல் 446 பேரும், Wairarapa வில் 229 பேரும், Capital and Coast இல் 1,584 பேரும், Hutt Valley வில் 987 பேரும், Nelson Marlborough வில் 524 பேரும், Canterbury இல் 2,642 பேரும், South Canterbury 217 பேரும், தெற்கில் 1,238, West coast இல் 43 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 22 பேர் உட்பட 960 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 17 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 398,329 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 224 முதல் டோஸ்கள், 478 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 5954 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 360 முதல் டோஸ் மற்றும் 3,520 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.