ஏழைகள் கொவிட்டினால் உயிரிழக்கின்றனர் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர் என ஒக்ஸ்பாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வம் கொவிட் காலத்தில் இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள ஒக்ஸ்பாம், பொருளாதார சமநிலையின்மை இதன் காரணமாக அதிகரித்துள்ளது இது நாளாந்தம் 21300 பேர் உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

2022 ற்குள்  நாங்கள் முன்னொருபோதும் இல்லாத கரிசனைகளுடன் நுழைகின்றோம் என தனது சமத்துவமின்மை கொல்கின்றது என்ற அறிக்கையில் ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தற்போது காணப்படும் மோசமான சமத்துவமின்மையை உலகின் வறிய மக்களிற்கும் நாடுகளிற்கும்  எதிரான  பொருளாதார வன்முறை எனவும் ஒக்ஸ்பாம் வர்ணித்துள்ளது.

இந்த ஆழமான சமத்துவமற்ற உலகில் கட்டமைக்கப்பட்ட மற்றும்அமைப்பு ரீதியான கொள்கைகள் அரசியல் ரீதியிலான தேர்வுகள் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களிற்கு ஆதரவாக வளைந்துள்ளன என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மை மக்களிற்கு இது தீங்கை ஏற்படுத்துகின்றது எனவும் ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி வழங்கலில் காணப்படும் சமத்துவமின்மை இதற்கான சிறந்த உதாரணம் என அது தெரிவித்துள்ளது.

தடுப்பூசி கிடைத்திருந்தால் மில்லியன் கணக்கான மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள் ஆனால் அவர்களிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது  என தெரிவித்துள்ள ஒக்ஸ்பாம் ஆனால் அவர்கள் இறந்துவிட்டனர் பெரும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தி தங்கள் வசம் வைத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா இலத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒருமில்லியன் பெண்கள் யுவதிகளை விட அதிகமான செல்வம் 252 ஆண்களிடம் உள்ளது என தெரிவித்துள்ள ஒக்ஸ்பாம் 3.1பில்லியன் மக்களிடம் உள்ளதை விட உலகின் மிகப்பெரும் பத்து செல்வந்தர்களிடம் அதிக செல்வம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.