இந்தியாவின் பழமையான கிளப்களில் ஒன்றான தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த தீ விபத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற

இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செகந்திராபாத் கிளப் 1878‌ ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. செகந்திராபாத் நகரின் மையப்பகுதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கிளப்பில் 5000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

மேலும் இந்த கிளப் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது