இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான ஹபாவில் இருந்து அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டரில் 2 விமானிகளும், வான் கண்காணிப்பாளர் ஒருவரும் பயணித்த நிலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கடற்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் பயணித்த வான் கண்காணிப்பாளர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.