பூமியின் தென்துருவமான அன்டார்டிகாவுக்கு தனியாளாக சென்றடைந்த சாதனையை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 32 வயதான பெண் இராணுவ அதிகாரி கேப்டன் ஹர்பிரீத் சாண்டி, படைத்துஉள்ளார்.

பிரிட்டன் இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ஹர்பிரீத் சாண்டி, பிசியோதெரபிஸ்ட் ஆகவும் உள்ளார்.

பூமியின் தென்துருவமான அன்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வந்த நிலையில் 40 நாட்கள் 1,127 கி.மீ., துாரம் தனியாளாக பயணம் செய்து பூமியின் தென்முனையைத் தொட்டுள்ளார்.

மைனஸ் 50 டிகிரி கடும் குளிரில் இந்த சாகச பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளது குறித்து சமூகவலை தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

'இதுபோன்ற சாகசங்கள் தான் என் வழக்கமான பணி என்பதை உணர்த்தியுள்ளேன். நம்மால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் செயல்பட விரும்புகிறேன்' என, சமூக வலை தளத்தில் சாண்டி பதிவிட்டுள்ளார்.