உலகம் முழுவதும் கொரோனாவை பரவ விட்ட சீனா இப்போது யாருக்காவது கொரோனா கண்டறியப்பட்டால் உடனே அந்த ஊரையே இழுத்து மூடி விடுகிறது.

இப்படித்தான் தற்போது ஒரு ஊரில் 3 பேருக்கு கொரோனா பரவி விட்டதால் 10 இலட்சம் பேர் வசிக்கும் அந்த ஊரையே இழுத்து மூடி விட்டார்கள்.

மத்திய சீனாவில் உள்ள யூஷூ என்ற நகரில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹெனான் மாகாணத்தில் உள்ள அந்த ஊரில் கிட்டத்தட்ட 10.2 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அங்கு 3 பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த ஊரின் எல்லைகள் மூடப்பட்டு விட்டன.

சூப்பர் மார்க்கெட்டுகள், பள்ளி, கல்லூரிகள், அனைத்துப் பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து, ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் மூடி விட்டனர்.

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வேலை பார்ப்போர் உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

பணியிடங்களுக்கு வர விரும்பினால் கொவிட் நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.