தேசிய சுற்றாடல் சபையின் கூட்டங்களில் ஆதிவாசி களின் தலைவரான உறுவாரிகே வன்னில அத்தோவை ஸூம் மூலம் பங்கேற்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, சுற்றாடல் சபையின் மாதாந்த கூட் டங்கள் மற்றும் அவசர கலந்துரையாடல்களுக்காக வன்னில அத்தோவை தம்பனையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத் துள்ளார்.

ஆதிவாசி சமூகத்தின் தலைவர் ஒருவர் சுற்றுச்சூழல் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

சுற்றாடல் சபையினால் 13 அமர்வுகள் முன்னெ டுக்கப்பட்ட போதிலும் ஆதிவாசிகளின் தலைவரை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

‘சுரகிமு கங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் நேற்றைய முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே அமைச்சர் அமரவீர மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.