அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரித்தானியாவுடனும் இணைந்து இதற்கான ஆரம்பக்கட்ட களப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து விலகியதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதனை அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.