நாட்டில் ஏராளமான பகுதிகளில் நாளை (23) பாடசாலைகள் மீள் திறக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்கு கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

6 முதல் 13 ஆம் வகுப்பு வரையான தரங்களுக்கு நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் மீள் திறக்கப்படும் என சமீபத்தில் கல்வி அமைச்சினால் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மேல் மாகாணத்திலும் உள்ள பாடசாலைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.நாடளாவிய ரீதியில் 5,637 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக நாளை மீண்டும் திறக்கப்படும்.

 

பாடசாலைகளிலிருந்து கொரோனா தொற்று பரவும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் நிச்சயமாக நான் அரசாங்கத்தின் சார்பாக ஏற்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.