மக்களாட்சி மலர்ந்த பின்னும் அரச குடும்பத்தை மிகவும் மரியாதையாக நடத்தும் ஒரே நாடு பிரிட்டன். பிரிட்டன் அரசால் பெரிதும் மதிக்கப்படுவது பிரிட்டன் அரச குடும்பம்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில்  ஒரு மசோதாவை தாக்கல் செய்ய ராணி இரண்டாம் எலிசபெத் இறுதியாக கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும்.

ராணி இரண்டாம் எலிசபெத் உயிருக்கு அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்பது பலருக்குத் தெரியாத விஷயம். இவருக்கு எதிரானவர்கள் இவரை கொல்ல திட்டமிட வாய்ப்புள்ளதால் 90 வயதைக் கடந்த ராணிக்கு இன்னும் பாதுகாப்பு வளையம் தளர்த்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓர் நபர் பிரிட்டன் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார்.

சுதேஷ் அம்மான் என்கிற 20 வயது  வாலிபர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து 2 பிரிட்டன் குடிமக்களை கத்தியால் தாக்கியுள்ளார். இவர் இந்த தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னரே சிறையிலிருந்து விடுதலை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவர் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இவரை விடுவிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரித்தது. இந்த நிலையில் இவர் லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டார்.

வெளியே வந்த அம்மான் ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் முன்னதாக இவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது இவர் பிரிட்டன் சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டனை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய பயங்கரவாதியான அம்மான் கொல்லப்பட்டது அந்நாட்டில் சாதனையாக பார்க்கப்படுகிறது