அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர்66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 4 பேரும் உயிரிழந்து உள்ளனர்.