ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாட்டுக்கு யாரும் வரவில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியதால் ஆப்கானிஸ்தான் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்ற அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அலுவலகத்தில்  பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது.