சிலந்தி வி‌ஷத்தில் இருந்து மாரடைப்பை தடுக்கும் மாற்று மருந்தை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

பிரேசர் தீவில் உள்ள ஒரு வகை சிலந்தியின் வி‌ஷத்தில் காணப்படும் ஒரு மூலக்கூறிலிருந்து மருந்தை உருவாக்கி உள்ளனர்.

இதய செல்கள் மீண்டும் செயல்பட வைக்கும் ஹை 1ஏ எனப்படும் ஒரு புரதத்தை சிலந்தி வி‌ஷத்தில் இருந்து விஞ்ஞானிகள் குழு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.