நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.