வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்  நேற்று  தெரிவித்தது. 

1960 ஆம் ஆண்டு முதல் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் நுவன் ஹேவாகமகே தெரிவித்தார். 

"கொரோனா வைரஸ் 1960 களில் விலங்குகளில் பதிவாகி இருந்தது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக எங்கும் பதிவாக வில்லை. எனவே இந்தச் செய்தியைக் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை."