இன்று காலை நாகேரே அருகே (Ngaere) மாநில நெடுஞ்சாலை 3 இல் (State Highway 3) பள்ளி பேருந்துடன் வேன் ஒன்று மோதியதில் மாணவர்கள் பலரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வேனின் 22 வயதுடைய ஓட்டுனர் பலத்த காயமடைந்தார். அவர் நியூ பிளைமவுத் தரனகி அடிப்படை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹுவேராவிலிருந்து பேருந்தில் நியூ பிளைமவுத்துக்கு 20 முதல் 30 மாணவர்கள் பயணம் செய்து வருவதாக பிரான்சிஸ் டக்ளஸ் நினைவு கல்லூரி முதல்வர் டிம் டக் தெரிவித்தார்.

நியூ பிளைமவுத் கத்தோலிக்க சிறுவர் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர் என்று டக் கூறினார்.