கடந்த ஆண்டு(2023) பூமி தனது அதிகமான வெப்பத்தை பதிவு செய்ததோடு, வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதன்காரணமாக பூமியின் வெப்பத்தை குறைப்பதற்கு ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சூரியனில் இருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்புவதற்கான கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த திட்டமானது, மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும், இதனால் மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பி விடும்.

அத்தோடு, இந்த ஆய்வினால் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும். இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய திருப்பும்னையாக இருக்கும் என கூறப்படுகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ஆய்வொன்றும் இது தொடர்பில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இது வெற்றியடைந்தால் பூமியின் வெப்பத்தை இது கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், இது நிச்சயம் தற்காலிகமான தீர்வாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.