நேற்றையதினம் Feilding இல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 4.15 மணியளவில் Collins Cres இல் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததை அடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்நிலையில் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதால், Feilding பகுதியில் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து பொலிஸ் இருப்பை எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்