இலங்கை

சீனாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ள தடை விதித்துள்ளதமைக்கு இலங்கை மீதான தனது அதிருப்தியை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் 2024 ஜனவரி 3ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு ஆய்வை மேற்கொள்ள இலங்கை தடைவிதித்துள்ளது. சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3, தென் இந்தியப் பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் அதிகாரப்பூர்வமாக சீன இயற்கை வள அமைச்சகத்தின் மூன்றாவது கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது.

அண்டை நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் இலங்கையின் இந்த முடிவை சீனாவிற்கு அடி என்று பரவலாகப் பாராட்டின.

எனினும், இந்த முடிவால் எரிச்சலடைந்த சீன அதிகாரிகள் , வேறொரு நாட்டின் செல்வாக்கின் பேரில் இத்தகைய முடிவை எடுத்ததற்காக இலங்கை மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.