ஆக்லாந்தின் Mt Albert இல் இன்று இடம்பெற்ற கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.15 மணியளவில் He Ana Way என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த எவரும் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்