இன்று காலை மேற்கு ஆக்லாந்தில் காரை  திருடியதாக கூறப்படும் பதின்ம வயதினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Māngere Bridge இல் உள்ள Scott Avenue வில் அதிகாலை 3.10 மணியளவில் வாகனம் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

வாகனம் மாநில நெடுஞ்சாலை 20 இல் பயணித்தது.

குறித்த வாகனம் ஈகிள் ஹெலிகாப்டரால் கண்காணிக்கப்பட்டது.

பின்னர் Royal View சாலையில் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த 5 வாலிபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை 19 வயதுடைய பெண் Manukau மாவட்ட நீதிமன்றத்திலும், 15 வயது சிறுவன் Manukau இளைஞர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று பேர் இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்