இன்று காலை ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Glenden இல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2 மணிக்கு முன்னதாக, Scowns Way இல் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் இவர்கள் இருவரும் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 மற்றும் 37 வயதுடைய இவர்கள் இருவர் மீதும் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் இன்று Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்