ஆக்லாந்தில் உள்ள வணிக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை பல தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Onehunga வின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒற்றை அடுக்கு கட்டிடத்தில் இந்த‌ தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

15 டிரக்குகள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறுகிறது.

கட்டிடத்தில் 20 முதல் 30 மீட்டர் வரை தீ பரவியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்