திருடப்பட்ட காரில் தெற்கு ஆக்லாந்தின் தெருக்களில் நள்ளிரவு ஆபத்தான முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 2 மணிக்கு முன்னதாக, Clendon இல் உள்ள Roscommon Place வழியாக இவர்கள் பயணித்தபோது பொலிஸார் குறித்த வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

பின்னர் ஹெலிகாப்டரை பயன்படுத்தி அதன் நகர்வுகளை கண்காணித்தனர்.

Counties Manukau மத்திய பகுதி தடுப்பு மேலாளர் இன்ஸ்பெக்டர் மார்க் சிவர்ஸ் கூறுகையில்...

கார் அதி வேகத்தில் பயணித்ததாகவும், பின்னர் Manurewa விற்குள் செல்லும்போது, ​​​​கார் Hill வீதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

நான்கு இளைஞர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி பொலிஸார் சரணடைந்ததாக சைவர்ஸ் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 வயது சிறுவன் மனுகாவ் மாவட்ட இளைஞர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் 12 வயதுடைய இருவர் மற்றும் 17 வயதுடைய ஒருவரும் இளைஞர் உதவி சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்