Christchurch இல் உள்ள Port Hills இல் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நான்காவது நாளாக போராடி வருகின்றனர்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவக் கட்டுப்பாட்டாளர் ஸ்டீவ் கென்னடி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று உருவாகும் முன் ஏழு ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும், என்றார்.
தீ பரவல் காரணமாக வெளியேற்றப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களையும் எங்களால் மீண்டும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிந்தது, ஆனால் தீ அணைக்கப்படவில்லை என்பதை அவர்கள் அனைவரும் அறிவார்கள்.
மேலும் அவர்கள் மீண்டும் வெளியேற வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே Canterbury முழுவதும் தீ பரவும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதாக அவர் எச்சரித்தார், மேலும் மற்றொரு தீயைத் தூண்டும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
செய்தி நிருபர் - புகழ்