சூர்யா நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பாப்புக்கு மத்தியில் 'கங்குவா' படம் உருவாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயார் ஆகி வருகிறது இப்படம். வரலாற்று ஜானர் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சூர்யா பல கெட்டப்களில் நடித்து வருகிறார்.

'கங்குவா' படத்தினை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 'சூரரைப் போற்று' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா, சுதா கொங்கரா இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அண்மையில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி விட்டது. 'சூர்யா 43' படமாக உருவாகவுள்ள இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சூர்யா ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர்.

இந்நிலையில் கார்த்தியை தொடர்ந்து அவரது அண்ணன் சூர்யாவுக்கு அதிதி ஜோடியாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.