பிக் பாஸ் 7 வீட்டில் இருப்பவர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். போட்டியாளர்களை விட அவர்களின் குடும்பத்தார் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடித்திருக்கிறது.

இன்று காலை வந்த நிக்சனின் அப்பா அனைவரின் கைதட்டல்களையும் பெற்றுவிட்டார். இந்நிலையில் விஷ்ணு விஜய் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்.

அவர்கள் விஷ்ணுவை தனியாக அழைத்துச் சென்று புத்திமதி வழங்கியிருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமாவுடன் அதிக நேரம் செலவிடுகிறார் விஷ்ணு. அவருக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே லவ் டிராக் ஓடுவதாக பேச்சு உள்ளது.

இந்நிலையில் குடும்பத்தார் விஷ்ணுவிடம் கூறியிருப்பதாவது, எல்லார்கிட்டயும் சரிசமமாக பழகணும். அதிகமாக ஒரு பக்கம் போக வேண்டாம் என்று சொல்ல புரியுது, புரியுது என்றார் விஷ்ணு.

ஸ்பெஷல் டைம் வேண்டாம். யாருக்கும் ஸ்பெஷல் டைம் கொடுக்க வேண்டாம். அவங்க இரண்டு பேர் ப்ரெண்ட்ஷிப் வந்து நல்லா இருக்கு. அதுக்குள்ள நீ போகாமல் இருப்பது நல்லது. நீங்க அவாய்ட் பண்றது நல்லது என குடும்பத்தார் கூறினார்கள்.

இதையடுத்து அங்கு வந்து அமர்ந்தார்கள் மாயாவும், பூர்ணிமாவும். நான் விஷ்ணுகிட்ட பெருசா பேசினதே கிடையாது என பூர்ணிமா சொன்னதை கேட்டு பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல வந்த விருந்தாளிகளுக்கும் ஒரு நிமிடம் தலையே சுத்திவிட்டது.

பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது. விஷ்ணுவிடம் மணிக்கணக்கில் கடலை போட்டுட்டு பேசவே இல்லைனு பொய் சொல்றீங்களே பூர்ணிமா. இது உங்களுக்கே ஓவராக தெரியவில்லையா என பிக் பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வார இறுதியில் ஒரு குறும்படம் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது பிக் பாஸ். விஷ்ணுவும், பூர்ணிமாவும் பேசிய வீடியோக்களை போட்டுக் காட்டி நீங்கள் மாயாவை அடுத்து அவருடன் தான் அதிகம் பேசியிருக்கிறீர்கள் என்பதை பூர்ணிமாவுக்கு புரிய வைக்கவும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே விஷ்ணு குடும்பத்தார் பேசுவதை பார்த்தால் இந்த காதல் கதைக்கு ஆயுள் இல்லை என்பது போன்று தெரிகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போன பிறகு விஷ்ணுவும், பூர்ணிமாவும் காதலை தொடர்வார்கள் என்பது சந்தேகம் தான். விஷ்ணு குடும்பத்தார் நடந்து கொள்வதை பார்த்தால் அவர்களுக்கு பூர்ணிமாவை பிடிக்கவில்லை என்பது போன்று தெரிகிறது என விமர்சனம் எழுந்திருக்கிறது.