பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றுகொண்டு இருக்கின்றது. 75 நாட்களை கடந்துள்ள இந்த சீசனில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இருந்தாலும் தற்போது இந்த வீட்டில் பத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்னும் இந்த சீசன் முடிவடைய நான்கே வாரங்கள் தான் இருப்பதால் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற வேண்டும்.

இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்றது. எனவே இந்த வாரமும் இரண்டு எலிமினேஷன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த வாரம் மூன்றே போட்டியாளர்கள் தான் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ரவீனா, விசித்ரா, விக்ரம் ஆகியோர் தான் நாமினேட் ஆகியுள்ளார். அதிசயமாக அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் ஆகியோர் நாமினேட் ஆகவில்லை. வழக்கம்போல மாயாவும் நாமினேட் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகவே இருக்கின்றது. இதுவரை மாயா ஒரு முறை தான் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூன்று போட்டியாளர்களின் விசித்ராவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகளவில் இருக்கின்றது. எனவே அவர் கண்டிப்பாக காப்பாற்றப்படுவார். இதையடுத்து சரவண விக்ரம் அல்லது ரவீனா ஆகியோரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறக்கூடும். இவ்விருவரின் ரசிகர்கள் அதிகப்படியாக ரவீனா தான் வெளியேறுவார் என கூறி வருகின்றனர்.

ரவீனா இதுவரை பிக் பாஸில் எதுவுமே செய்யவில்லை என்றும், கடந்த வாரம் ரவீனா மணிக்கு பாரபட்சம் பார்த்து செயல்பட்டதனால் ரசிகர்கள் உச்சகட்ட ஏமாற்றத்தில் இருக்கின்றனர். எனவே அவர் தான் இந்த வாரம் அநேகமாக வெளியேறுவார் என பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த சீசனில் எதிர்பாராத பல விஷயங்கள் நடைபெற்று வருவதால் எதையும் உறுதியாக கூறமுடியவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.