வெலிங்டனில் இருந்து வடமேற்கே 60 கிமீ தொலைவில் உள்ள Kāpiti Coast இல் Raumati கடற்கரையில் இன்று மீட்கப்பட்ட படகு ஒன்றின் உரிமையாளரை கண்டுபிடிக்க பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த படகு நீரில் கவிழ்ந்த நேரத்தில் அதில் யாரேனும் இருந்தார்களா என்பதை அதிகாரிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர்.

LandSAR தன்னார்வலர்கள் காபிட்டி கடற்கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த படகு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது புதன்கிழமை அதை‌ கடற்கரையில் பார்த்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்