ஆக்லாந்து கவுன்சில் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி பீட்டர் குட்செல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இவர் மூன்று ஆண்டுகள் தலைமை நிதி அதிகாரியாக பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலின் 10 ஆண்டு பட்ஜெட் ஆலோசனை ஆவணத்தை அவரும் அவரது குழுவினரும் அளித்த பிறகு அடுத்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் குட்செல் கவுன்சிலை விட்டு வெளியேறுவார் என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆக்லாந்து கவுன்சில் சாதித்தவற்றில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாகவும் பெருமையாகவும் இருக்கிறேன், குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் கொவிட், வானிலை நிகழ்வுகள், காலநிலை பாதிப்புகள் மற்றும் வட்டி, பணவீக்கம் மற்றும் பட்ஜெட் அழுத்தங்கள் போன்றவற்றில் என குட்செல் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சதர்ன் கிராஸ் ஹெல்த்கேரில் தலைமை நிதி அதிகாரியாக புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாக ஆக்லாந்து கவுன்சில் தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்