பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரியா நாட்டில் அந்நாட்டு அரசு டேட்டிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

தென்கொரியா நாட்டில் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பில் இளைஞர்கள் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும்  திருமண நிகழ்வில் இளைஞர்கள் ஈடுபடவும் தென்கொரியா நாட்டில்  டேட்டிங் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.  இளைஞர்கள் இடையே திருமண ஈடுபாடு குறைந்து வருவதால் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பழகி அன்பை பரிமாறிக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.