சட்டவிரோத தெருப் பந்தயத்தில் ஈடுபட்ட வாகனம், கர்ப்பிணி பார்வையாளர் ஒருவர் மீது மோதியதில் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆக்லாந்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 19 அன்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக Counties Manukau கிழக்கு CIB இன் பகுதி விசாரணை மேலாளராக இருக்கும் டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் டீன் பேடி கூறினார்.

கிழக்கு Tamaki இல் உள்ள  Bruce Roderick மற்றும்‌ Offenhauser Drives சந்திப்பில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தீவிரமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, வயிற்றில் இருந்த பெண் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டு Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

சட்ட விரோதமான தெருப் பந்தயத்தால் காவல்துறை மற்றும் சமூகங்கள் இரண்டுமே கவலையடைந்துள்ளதாக பேடி கூறினார்.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு, இதனால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள், சம்பவத்தை படம்பிடித்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்