இந்தியா: தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு கிட்டத்தட்ட10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. நுரையீரல் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விசாரிக்கப்பட்டதாகவும் மனைவி பிரேமலதாவிடம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது அரசு தரப்பிலிருந்து என்ன உதவிகள் தேவை என்றாலும் தயங்காமல் கேட்டுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்லாமல் நுரையீரல் பிரச்சினை உள்ளதால் விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவைப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து வழங்குமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் அவருடைய உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும் மருத்துவ நிர்வாகமும் தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்களாம். விஜயகாந்த் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக பாசம் உள்ளது. ஒரு முறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தை ஸ்டாலின் நேரில் போய் சந்தித்து நலம் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.