ஆக்லாந்தின் Half Moon Bay இல் காணாமல் போன இந்திய பெண் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் கடைசியாக நேற்று (29) மாலை 5 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த பெண் வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,