ஆக்லாந்தின் Half Moon Bay என்ற இடத்தில் இந்திய பெண்‌ ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் கடைசியாக நேற்று (29/11) மாலை 5 மணிக்கு அவரது வீட்டில் இருந்து சாம்பல் நிற டாப் மற்றும் கருப்பு டிராக் பேண்ட் அணிந்து வெளியே நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவரிடம் அடையாள அட்டையோ, கைபேசியோ இல்லை. அவர் ஒரு மெல்லிய உடலமைப்பை கொண்ட, மேலும் 164 சென்டிமீட்டர் உயரம் உடையவர்.

அவரது குடும்பத்தினர் அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர்.

எனவே நீங்கள் அவரை பார்த்திருந்தால், 0211530502 / 022 3217727 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.