பெரும்பாலான நியூசிலாந்தர்கள் வகுப்பறையில் செல்போன்கள் தடை செய்யப்படும் திட்டத்தை ஆதரிக்கின்றனர், ஆனால் இடைவேளை நேரத்தில் அல்ல.
தேசிய கட்சி தலைமையிலான அரசு பள்ளிகளில் தொலைபேசிகளை முற்றிலுமாக தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் நாளின் தொடக்கத்தில் தங்கள் தொலைபேசிகளை கைவிட்டு, வீட்டிற்க்கு செல்லும் போது அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Horizon Research நடத்திய ஆய்வில் 61 சதவீதம் பேர் வகுப்பு நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்வதை ஆதரித்தனர். ஆனால் இடைவேளையின் போது அல்ல
56 சதவீதம் பேர் பள்ளி நாள் முழுவதும் பயன்படுத்த தடை விதிப்பதை ஆதரித்தனர்.
16 சதவீதம் பேர் தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர் ( 60 சதவீதம் பேர் அந்த கருத்தை ஏற்கவில்லை)
52 சதவீதம் பேர் பள்ளிகள் முடிவெடுக்க அனுமதி அளித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தொலைபேசி தடை கொள்கை சர்ச்சைக்குரியதாக அறிவிக்கப்பட்டாலும், அதற்கு திடமான மக்கள் ஆதரவு இருப்பதாக ஹொரைசன் கூறினார்.
இந்த கணக்கெடுப்பு நவம்பர் 10-16 திகதிகளில் நடத்தப்பட்டது.
செய்தி நிருபர் - புகழ்