விமானத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து இன்று காலை ஆக்லாந்தில் விமான சேவைகள் தாமதமாகின.

இந்த திட்டங்கள் புறப்படும் விமானங்களுக்கு அவசியமானவை, மேலும் விமானம் தனது பயணம் தொடங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நகரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விமானத் திட்டங்கள் மிகவும் மெதுவாக வெளியிடப்பட்டு, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆக்லாந்து விமான நிலைய செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி நிருபர் - புகழ்