Nelson புறநகர் பகுதியான ‌Stoke இல் நடந்த ஒரு  உயிரிழந்ததை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 10 ஆம் திகதி அன்று மாலை Orchard தெருவில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஜேம்ஸ் விட்டிகாவ் பார்டன் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒரு வாரம் கழித்து, சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளை நிற BMW கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

விசாரணைக்கு உதவிய பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவிப்பதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லெக்ஸ் புரூனிங் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்