Wairarapa இன்று பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 28 வயதான குறித்த நபர் நாளை Masterton மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மைக் சியர்ஸ் தெரிவித்தார்.
செய்தி நிருபர் - புகழ்