ஆக்லாந்து தேவாலயத்தில் நேற்றிரவு இரண்டு முறை தீ பரவல் ஏற்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில் ஆக்லாந்தின் North Shore இல் உள்ள Onewa வீதியில் அமைந்துள்ள Zion Hill Birkenhead Methodist தேவாலயத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

ஆறு தீயணைப்பு வாகனங்கள் வந்ததால், தேவாலயத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய தீ அணைக்கப்பட்டது.

இந்நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு, அங்கு மீண்டும் தீ பரவல் ஏற்பட்டதை அடுத்து அவசர சேவைகள் தேவாலயத்திற்கு அழைக்கப்பட்டன.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

இந்நிலையில் FENZ செய்தித் தொடர்பாளர், இரண்டு தீ பரவலும் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதாகக் கூறினார்.

அதே நேரத்தில் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்