இலங்கை

இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும்.

கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதற்கட்டமாக எதிர்வரும் 2024 ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.

அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையை பின்பற்ற வேண்டும்.

கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 50% கட்டணத்தை அதிகரிக்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை வழங்கவில்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.