அஜித் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'விடாமுயற்சி' படம் துவங்கியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பதற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்து வந்தனர். இதனையடுத்து ஒரு வழியாக அண்மையில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது.

இந்த ஷுட்டிங்கில் அஜித், த்ரிஷா, பிக்பாஸ் பிரபலமான ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி 'விடாமுயற்சி' படத்தில் ஒரு பிளாஸ்பேக் காட்சி உள்ளதாம். இதில் மிகவும் இளமையாக தெரிவதற்காக உடல் எடையை குறைக்கும் வேலையில் த்ரிஷா இறங்கியுள்ளாராம். ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் த்ரிஷா, மேலும் உடல் எடையை குறைப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 'லியோ' படத்தினை தொடர்ந்து தற்போது அஜித்துடனும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளது உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. 'விடாமுயற்சி' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'மங்காத்தா' படத்தினை தொடர்ந்து இந்த காம்போ சேர உள்ளது.