இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சிவலி அருக்கொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி வருமான இழப்பும் இந்த நிலைமையை நேரடியாகப் பாதித்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரி வருமான விஸ்தரிப்பு இலக்குகளை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.