நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இருப்பினும் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருகின்ற நிலையில், நடிகை திரிஷா இதுவரை அந்தப் படத்தை ஏன் புரமோட் செய்யவில்லை என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக வில்லன்களான சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து நடிகை திரிஷாவின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கம்போல அந்த போஸ்டரையும் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை. முன்னதாக லியோ படத்தின் சென்சார் சான்றிதழை மட்டும் த்ரிஷா ரீபோஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் தனது போஸ்டரை த்ரிஷா சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்வாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.